Sunday, July 02, 2006

7 லட்சம் பேர் உலகைக் காண.........

இந்தியாவில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் கார்னியா என்னும் விழி வெண்படலம் ஏதாவதொரு காரணத்தால் பாதிக்கப்பட்டதால் பார்வையற்றோர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் மேலும் 30 ஆயிரம் பேர் சேர்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வெறும் 5 ஆயிரம் பேர் மட்டுமே விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்து பயன் பெறுகிறார்கள்.

மற்றவர்கள் இந்த இரண்டு மணி நேர சிகிச்சைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.

ஏன் இவர்கள் காத்திருக்கிறார்கள்?

போதுமான அளவுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள்.
பல மருத்துவ மனைகளில் இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது.

இருந்தும் என்ன பயன்? கார்னியா வேண்டுமே!

7 லட்சம் பேர் கார்னியாவிற்காக வருடக்கணக்கில் காத்திருக்க, ஆண்டொன்றிற்கு 160 லட்சம் கார்னியாக்கள் புதைக்கப் படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன என்ற புள்ளி விவரம் அதிர்ச்சியளிக்கிறது.

ஆம், கடையில் வாங்க முடியாத, விலைமதிப்பில்லாத இரண்டு மனிதனுக்கு பார்வை கொடுக்கும் சக்தியுள்ள இரண்டு கார்னியாக்கள் ஒவ்வொரு மரணத்தின் போதும் புதைக்கப் படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன.

கிட்டத்தட்ட இந்தியாவில் ஆண்டொன்றிற்கு 80 லட்சம் பேர் இறக்கிறார்கள். இவர்களில் ஒரு சிறிய சதவீதம் பேர் மட்டும் விழிக்கொடை கொடுத்தால் போதும், காத்திருக்கும் 7 லட்சம் விழிகள் சில ஆண்டுகளிலேயே பார்வை பெறும். வரும் ஆண்டுகளில் கார்னியா பாதிக்கப்பட்ட எவரும் ஒருநாள் கூட பார்வை இன்றி தவிக்கவேண்டாம்.

1 Comments:

Blogger Suka said...

மிக நல்ல பதிவு. உண்மையில் இறப்பிற்குப் பின்னும் நமது உறுப்பு ஒன்று உயிர் வாழக் கிடைத்த உடம்புக்கு நன்றி சொல்லி விழிகளைத் தர வேண்டும்.

மிக முக்கியமான செய்தியை அளித்ததற்கு நன்றி.

வாழ்த்துக்கள்
சுகா

2:57 PM, July 07, 2006  

Post a Comment

<< Home