Tuesday, July 04, 2006

மனிதம்.

நான் எங்கோ படித்து எனது நாட்குறிப்பில் குறித்து வைத்த ஆங்கில கவிதையை என்னால் இயன்ற அளவு தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். கவிஞரின் பெயரை குறித்து வைக்காததற்கு வருத்தப்படுகிறேன்.

நான் எங்கிருந்து வருகிறேன் எனக்கேட்காதே.
எங்கே செல்கிறேனென்றும் கேட்காதே.

எனது உடையின் தரத்தைக் கொண்டோ…
எனது முடியின் நிறத்தைக் கொண்டோ…
என்னைக் கணித்துவிடாதே.

எனது முகத்தின் வடிவைக்கொண்டோ…
அதில் வடியா கருணை கொண்டோ…
என்னை எடைபோட்டு விடாதே.


காலப் போக்கில்
நான் ஏழையாகலாம் இல்லை செல்வனாகலாம்.
வீரனாகலாம் இல்லை கோழையாகலாம்.

உன்னைச் சுற்றியுள்ள குறுகிய வட்டத்தைக் கடந்து
நீ என்னைக் கூர்ந்து பார்த்தால்
உன்னில் சிலதை என்னிலும் என்னில் சிலதை உன்னிலும் காண்பாய்.

வலி வந்தால் நீயும்தான் என்னைப்போல் அழுகிறாய்.
இன்பத்தில் நானும்தான் உன்னைப்போல் நகைக்கிறேன்.

அடிப்படையில் நீயும் நானும் ஒன்றுதான்.

ஏதோ ஒன்று நமக்குள் பொதுவாய் இருக்கிறது.

மனிதமாயிருக்குமோ?

1 Comments:

Blogger Chandravathanaa said...

நல்ல கவிதை
வேறு கவிதைகளும் மொழி பெயர்த்துள்ளீர்களா?
இருந்தால் இங்கே பதியுங்கள்.
இப்படி மொழி பெயர்க்கப் பட்ட வேற்றுமொழிக் கவிதைகளை நான் விரும்பிப் படிப்பேன்.

3:24 PM, July 22, 2006  

Post a Comment

<< Home