Thursday, July 06, 2006

வீண்டும் சில வீட்டு கார்யங்கள்

என்னதான் திருட்டு VCD பார்ப்பதில் வசதியாக இருந்தாலும், தியேட்டருக்குப்போய் படம் பார்ப்பதில் இருக்கும் சுகமே தனி!!!

திருட்டு VCD கள் பெருகுவதற்கு தியேட்டர்களின் மோசமான தரமும் ஒருகாரணம்.

கேரளத்தில் தியேட்டர்களை ஓரளவு நல்ல முறையில் பராமரிக்கிரார்கள்.

நான் கேரள மாநிலம், காஞ்சிரப்பள்ளியில் பணிபுரிந்தபோது ஓபரா தியேட்டரில் ஓடிய அத்தனை மலயாளபடமும் பார்த்திருக்கிறேன்.

அங்கு கடைசியாக நான் பார்த்த படம் ' வீண்டும் சில வீட்டு கார்யங்கள்' . அதை பார்த்தபோது ஒரு கட்டத்தில் நான் அழுதேன்.

சமீபத்தில் அதே படத்தை asiyanet ல் மனைவியுடன் சேர்ந்து பார்த்தேன். அதே கட்டத்தில் மீண்டும் அழுதேன். திரும்பிப் பார்த்தேன் , என் மனைவியும் அழுதுகொண்டிருந்தாள்.

யாரேனும் அந்த படம் பார்க்கும் போது அழுதிருந்தால் எந்த கட்டத்தில் அழுதீர்கள் என்று சொல்லுங்கள்.

பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

5 Comments:

Blogger மகேஸ் said...

பாவூரான், நானும் ஒரு மலையாளப் படம் பார்த்து அழுதிருக்கிறான்.

படத்தின் பெயர் தெரியவில்லை.

ஒரு குடும்பத்தில் அப்பா இறந்து விடுவார். அம்மாவும் நோயில் இறந்து விடுவார்கள். குழந்தைகள் இருவரையும் சர்சில் உள்ள பாதிரியார் கவனித்து வருவார். ஒரு நாள் இரண்டு குழந்தைகளையும் இரண்டு வேறு வேறு குடும்பதினர் தத்தெடுத்துக் கொண்டு போய்விடுவார்கள் எனப் படம் முடியும். கடைசியில் இரண்டு கார்களும் இருவேறு திசையில் போகும் போது நான் அழுதுவிட்டேன்.

11:45 AM, July 14, 2006  
Blogger கானா பிரபா said...

வணக்கம் பாவூரான்

வீண்டும் சில வீட்டுக்காரியங்கள் படம் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், இன்னொரு தலை சிறந்த இயக்குனர் லோகிதாசின் கதையில் வந்தது. இந்தப்படம் பார்த்து 6 வருடங்களுக்கு மேல், ஆனாலும் திலகன் - ஜெயராமின் தந்தை மகன் பாசம் நெஞ்சை அள்ளும் காட்சிகள்.

3:49 PM, July 16, 2006  
Blogger துளசி கோபால் said...

நான் இதுவரை ஒரே ஒரு படம் பார்த்துத்தான் அழுதேன்.

'துலாபாரம்'

11:17 PM, July 16, 2006  
Blogger பாவூரான் said...

நன்றி மகேஸ்.

நன்றி கானா பிரபா,
மலயாள சினிமா பற்றிய உங்களின் அருமையான பதிவுதான் என்னை இதை எழுத தூண்டியது.

நன்றி துளசி கோபால்.

பாவூரான்.

12:34 AM, July 17, 2006  
Blogger Chandravathanaa said...

நான் இன்னும் அப்படத்தைப் பார்க்கவில்லை.

2:50 PM, July 22, 2006  

Post a Comment

<< Home