Thursday, July 13, 2006

பல்கலைக் கழக ஆசிரியர் பணியில் 100% இட ஒதுக்கீடு

இளநிலை உதவியாளர் பதவிகள் கூட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் எழுத்து தேர்வு நடத்தி நிரப்பப்படும் போது, பல்கலைக் கழக ஆசிரியர் பதவிகளுக்கு எவ்வித எழுத்து தேர்வும் இல்லை என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இப்பதவிகளில் 100 % இடங்களும் சம்பந்தப்பட்ட பல்கலைக் கழக துணை வேந்தர் , அல்லது கல்வி அமைச்சரைத் தெரிந்தவருக்கே ஒதுக்கப் படுவதாக கேள்விப் படுகிறேன்.

அப்படியென்றால் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அனைவரும் துணை வேந்தர் , அல்லது கல்வி அமைச்சரைத் தெரிந்தவர்களா? என விவரம் கெட்ட கேள்வி ஒன்றை கேட்டேன்.

போதுமான அளவு காசு இருந்தால் இவர்களுக்கு தெரிந்தவர்களாகிவிடலாம் என விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?

4 Comments:

Blogger மாயவரத்தான் said...

உங்க லேட்டஸ்ட் பதிவிலே பின்னூட்டமிடமுடியவில்லை. என்னன்னு கொஞ்சம் கவனிங்க சார். அதனால இந்தப் பின்னூட்டம் இங்கே...


//ஒரு வரலாற்று ஆசிரியருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுக்கத் தவறும் நமக்கு, தவறான வரலாறு எழுதுபவர்களை கண்டிக்க என்ன தகுதி இருக்கிறது.//

அது சரி...வரலாறே நமக்கு பிடிக்கலைன்னா நாமளே திருத்தி எழுதிக்கிட்டு இருக்கோம். நீங்க என்னடான்னா?!

1:18 PM, July 16, 2006  
Blogger பாவூரான் said...

நன்றி மாயவரத்தான்,

எனது அந்த பதிவையே காணவில்லை.

திரும்பவும் பதிப்பிக்க வேண்டுமா?

இல்லை நமது வரலாறு போலவே, எனது பதிவும் அழிந்து போகட்டும் என விட்டுவிடவா?

பாவூரான்.

12:39 AM, July 17, 2006  
Blogger புதுமை விரும்பி said...

It is true that lecturers in the universities are not selected on the basis of a written exam but they also must have to qualify an interview in front of a board which will have faculty members with-in and outside university. So, the claim that people known to the registrar are only selected may not be true.

12:03 PM, July 19, 2006  
Blogger ரவி said...

பத்திரிக்கையில் முறையான விளம்பரம் கொடுக்கவேண்டும், பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்ற ஒருவர், ஷார்ட் லிஸ்ட் செய்யும் புரொபைல்கள் - இண்டர்வியூ பேனலுக்கு அனுப்பபடும்..

அங்கே செலக்ட் ஆகும் நபர்கள் - புரோக்கர்கள் மூலம் அமொவுண்டை தள்ளினால் - வேலை கிடைக்கும்..

:))

2:23 AM, July 20, 2006  

Post a Comment

<< Home